பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

13

எதற்காகப் பிறந்தோம் என்ற கேள்வி நியாயமானது தான். எதறகாக வாழ்கிறோம் என்று கேட்பது அநியாயமல்லவா?

ஜெகத்திலே தோன்றி இருக்கும் ஜீவன்கள் கோடானகோடி என்றால், அந்தக் கோடிகளிற் கோலோச்சி வந்த ஜீவன் மனிதப் பிறப்பல்லவா? அப்படிப்பட்ட ? மகாமேன்மையான, மகத்தான பிறப்பை, ஒராயிரம் காலம், பாரத் தவமிருந்து, வாராது வந்த மாமணியாகப் பெற்ற, இந்த மனித ஜீவியத்தை எதற்கு என்று கேட்டால் நிலைமை புரியவில்லையா? உண்மை தெரிய வில்லையா? நுண்மையும், திண்மையும் தெளிய வில்லையா?

வாழ்க்கை இரகசியம்

ஆக இந்த உலகில் மனித வடிவெடுத்து வந்ததற்காக வாழ வில்லை. வந்ததற்காக வாழ்வது என்பது விலங்கினம்போல் ஆகும். நின்று கொண்டே வாழ்ந்து மடிகின்ற தாவரங்கள் போலாகும்.

மனிதர்களாகிய நாம் எவ்வளவு பேறு பெற்று வந்திருக்கிறோம்! நமக்குச் சிரிக்கத் தெரியும். சிந்திக்க முடியும் பொலபொல வென்று பேச முடியும். பெரிய பெரிய வேலைகளை எல்லாம் திறமையாகச் செய்யவும் முடியும்

நம்மை வானளாவ பெருமைபடுத்திக் காட்டுகிற பேச்சு இருக்கிறதே. அதுதான் நமக்கு இறைவன் கொடுத்த பெரும் பொக்கிஷம் கண்முன்னே நடமாடும் காமதேனு.

அற்புத ஆற்றல் கொண்ட ஐராவதம. அனைத்தையும்