பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

15


அல்லது மறைமுகமாகச் சொல்லலாமா என்பதில் எற்பட்ட குழப்பமான நிலையில், மறைமுகமாகச் சொன்னால்தான் அதற்கு மரியாதை உண்டு என்று, தமிழர்கள் மரபிலேயே ரகசியமாகவே சொன்னார்கள்.

இதிலே என்ன சிறப்பு அம்சம் என்றால், சொன்னதை எல்லாம் வெளிப்படையாகத்தான் சொன்னார்கள். சொல்ல விரும்பிய விளக்கத்தை மட்டும் இரகசியமாகச் சொல்லிவிட்டார்கள்.

அன்றாடம் வாழ்க்கையை நடத்தக்கூடிய அவசியமான வார்த்தைகள் எல்லாம் வாழ்க்கையின் இரகசியத்தைச் சுமந்து கொண்டுதான் இருந்தன. அவற்றை ஆர்வத்தோடு பேசிய மக்களும் அர்த்தம் புரியாமலேயே பேசிப் பேசி மகிழ்ந்தார்கள். இருந்தாலும், வாழ்க்கையின் இரகசியத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. விண்டு பிடிக்கவும் முடியவில்லை.

வேடிக்கையாகச் சொல்வார்கள். “நாய்க்குக் கிடைத்தது தெங்கம்பழம்” என்று, முழுத்தேங்காயை உருட்டிக் கொண்டு இருந்த நாயின் பயனற்ற வேலை போல, மக்களின் வாயிலும் வந்த சொற்கள் காரியங்களைச் செய்ய உதவின. ஆனால், கருத்தை விளக்கவில்லை.

வாழ்க்கையை வாழ்வது ஒரு கலை என்றால், அதைப் பிறர் போற்றும் பெருமையுடன் வாழ்வது ஒரு தெய்வீகக் கலையாகும்.