பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

-

அப்படிப்பட்ட தெய்வீகக் கலையுடன், திவ்யமாக வாழும் ஒரு வாழ்க்கைக் கலையைத்தான் நமது முன்னோர்கள், நளினமாக நம்மிடம் தந்துபோய் இருக்கிறார்கள்.

அத்தகைய நளினமும், ரம்மியமும் மிகுந்த இரகசியப் பெட்டகங்களாகிய வார்த்தைகளின் இரகசியங்களை இனிவரும் பகுதிகளில் நாம் பிரித்துப் பார்க்க இருக்கிறோம்.

இந்த இரகசியம் வாழ்க்கைக்கு அவசியமானது, அதே சமயத்தில் வாழ்வுக்கு வசியமானது. கேட்பதற்கு அதிசயமானது. கேட்ட பிறகு அதிரசமானது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நூறு இரகசியங்களை உடைத்துப் போட்டாலும், நமக்கு வேண்டிய அதி முக்கிய இரகசியங் களையே இங்கே எடுத்துக் கொள்ள இருக்கிறோம். நாம் சொல்லத் தயாராகிவிட்டோம். அவற்றை ஏற்பதும், நோற்பதும் உங்களது திறன். உங்களது கடன், உங்களது fᏏ© ©Ꭲ .

החר