பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

21



அப்படியென்ன நான்கு வகைப் பிரிவு என்று கேட்கலாம்.

1. வேகம்
2. விவேகம்
3. யோகம்
4. வியோகம்

1. வேகம்

‘வேகம்’ என்பது உடலிலே இருக்கும் இளமையின் எழுச்சி. அதன் ஆற்றலால் எண்ணங்களில் வேகம் இருக்கும். சொற்களில் வேகம் இருக்கும். செயலிலே வேகம் இருக்கும். சிந்தித்துச் செய்வதும், செய்து விட்டுச் சிந்திக்கிற பாங்கே மேலோங்கி நிற்கும்.

அந்த வேகத்தின் ஆரம்பம் தெரியும். முடிவு தெரியும். இடையிலே என்ன நேர்கிறது என்பது எவருக்கும் தெரியாது. ஒரு சூழ்நிலையை, வாழ்கிற நிலையை விபத்தும், விபரீதமும் கலந்த வேதனையான சந்தர்ப்பங்களை விளைவித்துவிடும் தன்மை இந்த வேகத்திற்குண்டு.

இதைத்தான் ஆங்கிலத்தில் Speed Thrills என்பார்கள். இப்படி வேகமுள்ள இளமையைத்தான், கல்லா இளமையென்றும், பொல்லா இளமையென்றும் பேசுவார்கள். ஆக இந்த கல்லா இளமையையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இப்படிக் கட்டுப்படுத்தும் இரகசியத்தைத்தான் ‘இளமையில் கல்’ என்றார்கள்.

வேகமுள்ள இளமையை ஆற்றுப்படுத்த அடக்கிச் சாந்தப்படுத்த, அன்பால் அமைதிப்படுத்த, விளையாட்டு,