பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

o

மரம் போன்று வாழ்கின்ற ஒருவனை 'மரன் என்று அழைக்கிறோம். இப்படிப்பட்டவர்களால் பிறருக்குத் துன்பம் ஏற்பட்டுவிடுவதில்லை. நூற்றுக்குத் தொண்ணுறு விழுக்காடு சமுதாயத்தில் இப்படிப்பட்ட மனிதர்களே இரைந்து கிடக்கிறார்கள்.

2. பாமரன்

மரம் போன்றவர்களை விட இவர்கள் கொஞ்சம் சூட்சமம் தெரிந்தவர்கள். சொன்னால் விளங்கிக் கொள்பவர்கள். சொன்னபடி நடந்து கொள்ள முயற்சிப் பவர்கள். தானே சிந்தித்துச் செயல்படுகிற தன்மையும், திண்மையும் நிறைந்தவர்கள்.

சமுதாயத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற அறிவு ஜீவிகள். பாமரத்தனமாக என்றவொரு வார்த்தைக்குப்

பாத்திரமானவர்கள்.

3. அறன்

வள்ளுவர்தமிழ்ச்சமுதாயத்தை மிகக் கற்பனையுடன் கண்டுகளித்து, மேம்பட்ட தமிழ் மகனை மனிதன் என்று கூறாமல் 'அறன் என்று கூறினார். 'அறன் என்றால் ஒழுக்கம். ஒழுக்கமானது மூன்று வகைப்படுகிறது. மூன்று வகையான ஒழுக்கங்கள் உடல் ஒழுக்கம், நா ஒழுக்கம்,

உணர்வு ஒழுக்கம்.

இந்த மூன்று ஒழுக்கங்களிலும் சிறந்து விளங்குகின்ற ஒரு இல்லறத்தானை அவர் 'அறன் என்று அழைத்தார் அறன் என்பதற்கு, ஒழுக்கமானவன், ஒழுக்க சீலன் என்று பொருள். அவனது மனைவி அதே நற்குணங்களைப்