பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

-

இந்த இரகசியத்தை அறிவதற்கு முன்னர், இந்த உலகத்திலே உலாவருகிற அதிசயமான, உடலுக்கு அவசியமான சுவாசத்தைப் பற்றி நாம் கொஞ்சம் புரிந்து கொண்டாக வேண்டும்.

'சுவாசம் என்ற சொல் சுவாசம் என்று பிரிகிறது. சு. - என்றால் சுகம், நன்மை என்று பொருள். 'வாசம் - என்றால் இருக்குமிடம். வசிக்கும் இடம், பூவின் மணம் என்றுகூடச் சொல்லலாம். சுவாசம் என்பது சுகம் வசிக்கக்கூடிய ஒரு தன்மை என்று சொல்லலாம். ஆக, சுவாசம் செய்வது, உயிர் காக்கக்கூடிய, உடல் காக்கக்கூடிய ஒரு உயிர்மூச்சான செயல் என்பது நமக்குத் தெரியும்.

அப்படிப்பட்ட சுவாசம் செய்வதற்கு எது உதவுகிறது? காற்று, அந்தக் காற்றுக்கு ஒரு பெயர் வாசி. எல்லா லோகத்திலும் வாசம் வைத்திருக்கிற காற்றுக்கு வாசி என்று பெயர். அந்த வாசியைச் சுகத்திற்காகச் செய்கிற போது அதற்குப் பெயர்சுவாசி. இந்தச்சுவாசி வேலையை யார் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவருக்குப் பெயர்தான் சுகவாசி.

உடலுக்குள் காற்றை இழுத்துச் சுவாசித்துப் பிறகு வெளியே விடுவதுதான் சுவாச வேலை என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். காற்றை இழுப்பதும், வெளிவிடுவதும் ஆகிய இரண்டு

வேலைகள் மட்டும் சுவாசம் அல்ல.

ஒரு முழுமையான சுவாசம் என்பது நான்கு வேலைகளைக் கொண்டது. d