பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

மனிதன் செய்யும் சாதாரண வேலையல்ல. அது மந்திரம்போல இறைவனை நோக்கிச் செபிக்கின்ற பணியாக இருக்கின்றது.

அதாவது சம்' என்று காற்றை உள்ளே இழுக்கும் போது இறைவா நீ என் கூடவே வருகிறாய், இருக்கிறாய்" என்றும், காற்றை வெளியே விடும் பொழுது, 'இறைவா நான் உன் கூடவே வருகிறேன்' - என்றும் மனதால் தன்னை அறியாமல் செய்கிற அன்றாடப் பிரார்த்தனையாக இது அமைகிறது. இதற்கு 'அசபாமந்திரம்' - என்று

பெயர்.

ஒரு இடத்தில் உட்கார்ந்து, எண்ணி, உணர்ந்து, மந்திரம் சொல்கிறபோது அதற்குப் பெயர் ஜெபம் (ஜெபம்). எதையுமே சிந்திக்காமல் எண்ண நீரோட் டத்தில், எப்பொழுதும் தேரோட்டமாக அமைந்து

செய்கிற மந்திரம் ஒன்று உண்டு. அதற்கு 'அஜப மந்திரம்' - என்று பெயர்.

இப்படி மந்திரம் போலச் செய்கின்ற மணியான செயல்தான் அம்சமாகத் திகழ்கிறது. தொடர்கிறது. மனிதனை ஒரு மதிப்பிற்குரியவனாகத் தோன்றச் செய்கிறது.

இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள் காலமெல்லாம் களிப்போடும், கட்டுடலோடும், கலங்காத மனதோடும் வாழலாம்.

உடல் என்னும் பொருளைப் பதி, பசு, பாசம் என்று குறிப்பார்கள். பதி' என்பது உயிர் வாழ்கிற இடமாகிய உடல். 'பசு' என்பது உடலை உயிர்ப்பிக்கும் ஆற்றல்