பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


‘சாப்பாடு’ என்றால் ‘மரண அடி’ என்றே அர்த்தமாகிறது. இது என்ன புதுமையாக இருக்கிறதே என்று உங்களுக்குக் கோபம் கோபமாக வரும். ‘சா’ என்றால் சாதல். ‘பாடு’ என்றால் அவஸ்தை. அவஸ்தைப் பட வைத்து ஆளைச் சாகடிக்கும் விந்தையான பண்டம்தான் சாப்பாடு ஆகிறது. சாப்பிட வாருங்கள் என்று ஒருவரை அழைத்தவுடன் அவர் திருப்திப்பட்டுக் கொள்கிறவரை சோறுபோடுதல் என்பதைத்தான் எல்லோரும் தர்மம் என்பார்கள்.

அதிகமாக ஒருவர் சாப்பிடும் பொழுது அவரது மூச்சு முட்டுகிறது. ஆவி துடிக்கிறது. ஆன்மாவின் சக்தி குறைகிறது என்று யாரும் நினைப்பதுமில்லை. கவலைப்படுவதுமில்லை. சாப்பிட்ட பிறகு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்குவதைத்தான் நாம் அதிக எண்ணிக்கையில் பார்க்கிறோம். “பிண்டம் சுருங்கின் பிராணன் நிலை பெறும்” - என்கிறார் திருமூலர். சோற்றின் அளவைக் குறைத்து, வயிற்றின் சுமையைக் குறைத்து, மிதமாகச் சாப்பிட்டால் அது உயிருக்கு உற்சாகம் தரக்கூடிய காரியமாக அமையும்.

அப்படி மிதமாகச் சாப்பிடுபவனைத்தான் ‘மிதாசனி’ என்பார்கள். அதாவது மித அசனி. ‘அசனி’ என்றால் ‘உண்ணுதல்’ என்று அர்த்தம். அளவோடு சாப்பிட்டால் உடல் அழகுக்கு ஆதாரம். அதையே அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அமிர்தமாக இருந்தாலும் நஞ்சாகி விடுகிறது.

சாப்பாட்டை வரவேற்று வாங்கி வைத்துக் கொள்ளுகிற வயிறுதான் எக்காலத்திலும் சங்கடத்திற்கு