பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

49


ஆளாகிப் போகிறது. அந்த உணவை வாங்கிக் கொள்ளும் உணவுப் பைக்கு வயிறு என்று ஒரு பெயர். தொந்தி என்று ஒரு பெயர். தொப்பை என்று ஒரு பெயர்.

ஏன் வயிறு என்றார்கள்? உணவை வாங்கி ‘வை’ ‘இறு’ என்பதைக் குறிக்கவே ‘வயிறு’ என்றார்கள். வயிற்றுக்குள்ளே உணவு வந்தவுடன் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ஜீரணித்துவிட்டு, வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதுதான் இயற்கையின் இனிதான கட்டளை. அப்படி வலிமையுள்ள வயிறுதான் ஒருவனுக்கு வேண்டும்.

இல்லையேல் அந்த உணவுப்பையான வயிற்றுப்பை ‘தொப்பை’யாக மாறிப் போகிறது. தொப்பை என்ற சொல் தொல் +பை என்று பிரிகிறது. ‘தொல்’ என்றால் ‘சரிந்த’, ‘விரிந்த’ என்பது அர்த்தம். வயிற்றுப்பையானது. சரிந்து விரிந்து பழுதாகிப் பழசாகிவிடுவதால் அந்தத் தோல்பையைத் ‘தொல்பை’ என்றனர்.

தொல்பை இலக்கண ரீதியாக உச்சரிக்கப்படும்போது ‘தோற்பை’ என்று ஆனது. அதுவே உச்சரிப்பில் தொற்பை, தொற்பை என்று ஆகித் தொப்பை என்று வந்துவிட்டது.

சாப்பாட்டின் மேலுள்ள ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் வயிற்றினில் ஜீரண சக்தியை மிகுதிப்படுத்த முடியாமல், இந்த இரண்டிற்குமிடையே திண்டாடித் தவிப்பவர்களே ஏராளமான மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் படுகிற பாட்டையும், சுகக் கேட்டையும் அறிந்த அவ்வைப் பிராட்டியார் மிக நொந்து போய்ப் பாடுகிறார்.