பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

51



ஆசையோடும் அள்ளிக் கொட்டிக் கொள்வதைச் 'சாப்பாடு' என்றனர். ஆக, சாப்பாடு என்றதுமே அந்த இரகசியம் உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இனிமேல் சாப்பாட்டைச் சாதுரியமாக குறைத்துக் கொள்ளுங்கள், அறை வயிற்றளவு சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள்.

அரை வயிறு சாப்பிட்டு எப்படி உயிர்வாழ்வது என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். அரை வயிற்று அளவு, என்ன எவ்வளவு என்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. அந்த அரை வயிற்று அளவுக் கணக்கை இப்போது சொல்லிவிடுகிறேன்.

உங்கள் தட்டிலே உணவு இருக்கிறது. நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே வருகிறீர்கள். இன்னும் ஒருவாய் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும் என்ற திருப்தியானது உங்களுக்குத் தோன்றும்போது, அந்த ஒருவாய் உணவை உண்ணாமல் நிறுத்திவிடுங்கள். அது தட்டிலேயே இருக்கட்டும். நீங்கள் போய்க் கை அலம்பும்போது பசிப்பதுபோல் ஒரு உணர்வு இருக்கும். இன்னும் கொஞ்சம் சாப்பிட்டு இருக்கலாம் என்ற ஏக்கமும் வருத்தும். அப்படி எண்ணுகிற, உண்ணுகிற அளவுதான் அரை வயிற்றுச் சாப்பாடு. இதைத்தான் உணவுமுறை என்பார்கள்.

அரை வயிறு உணவு, கால்வயிறு தண்ணீர், மீதிக் கால்வயிறு காலியாக இருக்கும். நீங்கள் உண்ட உணவானது ஜீரணமாகி, உயிர்க்காற்றோடு ஒன்றாகும் போது, அங்கே கரியமில வாயு வெளியாகிறது. அது