பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரகசியம் - 6


முகம்

'ண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்' என்பார்கள். அந்த சிரசுக்கு முரசு கொட்டி முழங்கும் பேறாக, ஒளி மிகுந்த வாக்கியமாக, பூரிப்பாய் அமைந்திருப்பது முன்பகுதியாகிய முகம்.

ஒருவரின் முகத்தை வைத்துத்தான் அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. பதினான்கு சிறு சிறு எலும்புகளால் ஆன மூட்டுக்கள், அந்த முட்டுக்களின்மேலே முப்பது சிறு, சிறு சதைத் துண்டுகள். அதனைப் பொறுத்தியுள்ளதோல்பகுதி, அந்த அமைப்பைப் பொறுத்துத்தான் ஒருவரது முகம் அழகாக விளங்குகிறது.

முகம் என்பது அகத்தின் சாரளம் அடங்கிக் கிடக்கும்ஆன்மாவை வெளிக்காட்டும் நிலைக் கண்ணாடி.

உள்ளேயுள்ள அகத்தை, அகத்தின் சக்தியை, அகத்தின் எண்ணங்களை, ஆசாபாசங்களை அருமை