பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா •oe 55

©

- *

பெருமைகளை, அனைத்தையும் முகந்து வெளிக் கொண்டு வரும் முதிர்ந்த உறுப்புத்தான் முகம் ஆகிறது. அகம் அதனுள் விளையும் சுகம். சுகம் பொலிந்ததைச் சுற்றுச் சூழலுக்குக் காட்டுகிற முகம். எல்லாமே பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்திருக்கிறது.

அகம், என்ற சொல் அ+கம் என்று பிரிகிறது. 'அ' என்றால் அகச் சுட்டு, புறச்சுட்டு என்பார்கள். 'கம் என்றால் சந்தோசம். ஆகவே, அகம் என்பது உள்ளேயும், புறத்தேயும் ஊடாடிக் கொண்டிருக்கிற சந்தோசத்தைச் சொல்லுவதாக அமைந்திருக்கிறது.

'சுகம் என்ற சொல் 'சு+கம்' என்று பிரிகிறது. சு’ என்றால் நன்மை. சுய என்றும் அர்த்தம் உண்டு. 'கம்’ என்றால் சந்தோசம். அதாவது சுய சந்தோசம். தன்னளவில் ஏற்படுத்திக் கொள்கிற தரமான தகுதி நிலையே சுயசந்தோசமாகிறது.

இந்த அகத்தையும், சுகத்தையும் முகர்ந்து கொண்டு வருவதால் முகமென்றோம். முகம் என்ற சொல் 'மு'+'கம்' என்று பிரிகிறது. 'மு' என்றால் மூன்று 'கம்’

என்றால் சந்தோசம்.

இயல், இசை, நாடகம் என்கிற மூன்று தமிழை முத்தமிழ் என்கிறோம். இந்து மகாசமுத்திரம், வங்காளக்கடல், அரபிக்கடல் இந்த மூன்றையும் முக்கடல் என்கிறோம். மா, பலா, வாழை என்கிற மூன்று கனிகளை முக்கனி என்கிறோம். அதுபோல மூன்று வகை சந்தோசத்தையும் வெளிப்படுத்துவதுதான் முகம் என்று அழைக்கப்படுகிறது.