பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

    • =

மூன்று வகை சந்தோசம் என்பது எங்கே, எதனால், எப்பொழுது, எப்படி உண்டாகிறது என்கிற விபரத்தைச் சற்று விளக்கமாகக் காண்போம்.

உடலால் ஏற்படுகிற சந்தோசம். மனதால் ஏற்படுகிற சந்தோசம். ஆத்மாவால் ஏற்படுகிற சந்தோசம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். சந்தோசம்’ என்ற வடசொல் 'சன்+தோசம்’ என்று பிரிகிறது. தோசம்’ என்றால் குறை அல்லது நலிவு. சம்' என்றால் இல்லை என்று அர்த்தம்.

குறையோ, நலிவோ இல்லாத ஒரு நிலையைத்தான் சந்தோசம் என்கிறோம்.

1. உடலால் ஏற்படுகிற சந்தோசம் (Pleasure)

நாம் காரிலோ, பஸ்ஸிலோ ஏறிப் பயணம் செய்கிறோம். கூட்டமிருப்பதால் இடித்துக் கொண்டும், நெருக்கிக் கொண்டும் ஒருவித எரிச்சல் நிலையில் உட்கார்ந்து இருக்கிறோம். கூட்டம் குறைகிறது. நெருக்கம் விலகுகிறது. இப்போது உட்கார்வதற்கு, உடலுக்கு ஒரு இதமான இன்பம் கிடைக்கிறது.

இந்த இனிய நிலையைத்தான் ஆங்கிலத்திலே (Pleasure) என்பார்கள். இதுபோன்ற சுகமான சுய சந்தோசத்தை தருவதால்தான் காரைக்கூடப் பிளசர் கார்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். உடலுக்கு இதம் ஏற்படுகிறபோது பெறுகிற மகிழ்ச்சிதான் சந்தோசம்.

2. மனதால் ஏற்படும் சந்தோசம் (Joy)

இதை மகிழ்ச்சி என்று கூறுவார்கள். ஆங்கிலத்திலே Joy என்பார்கள். ஒருவரை நாம் எதிர்பார்த்துக் கொண்டு