பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா •o 59

மூஞ்சி அல்லது மூஞ்சை என்றால் கோணமுகம் என்று பொருள். காணச் சகிக்காத கோண முகம் அல்லது முகத்தைச் சரியாகப் பராமரிக்காததால் ஏற்பட்ட சாணி முகம் என்று கூடச் சொல்லலாம். முகம் என்றதும் வாய் நினைவுக்கு வந்து, வாய் என்றதும் சோறு நினைவுக்கு வந்து, சோற்றுப் பிண்டமாக அலைகின்ற சோம்பேறி மக்கள், கலைந்த தலைமுடியுடன், கொசு மொய்க்கும் கண்களுடன், சளி ஒழுகும் மூக்குடன், பக்கத்தில் வந்தால் பயங்கரமாக நாறுகிற பற்களுடன் காட்சியளிக்கின்ற போது, அது கோணல் முகம் அல்லது சாணி முகம் என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?

வெளிப்புறத்திலே சுத்தமாக வைத்துக் கொள்ளாத தால், வீணாகிப் போன முகம், ஆயிரம் போராட்டங் களினால் அவதிப்படுகின்ற அகத்தை வெளிப்படுத்து வதால், மாறிப்போய் அசிங்கமாகிவிடுகிறது.

இதனைத்தான் 'முகரைக்கட்டை' என்கிறார்கள். முகம் என்பது உயர் திணைப் பொருள். உயிருள்ள ஜீவனின் ஒப்பற்ற பரிமாணம், வாழும் வாழ்க்கையின் வடிவமைப்பைக் காட்டுகின்ற வண்ணத்திரை ஒவியம். ஆனால், கட்டை என்பது அஃறிணைப் பொருள். ஜீவனில்லாதது. வெளியிலே எறியப்பட வேண்டிய

ஒன்று. அடுப்பில் எரியப்பட வேண்டிய ஒன்று.

அதற்கும் இதற்கும் உவமை காட்டினால் அதற்கு என்ன மரியாதை?

ஒருவனது முகம் முகரக்கட்டையாக ஆகிற பொழுது, அவன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறான்