பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


என்று அர்த்தம். அவன் சமுதாயத்தில் தொலைந்துபோய் விட்டான் என்று அர்த்தம். கரையிலே செய்யப்படுகின்ற கப்பல், கடலுக்குள் போய்விட்டால் அது மீண்டும் கரைக்கு வர முடியாது. ஒன்று கரைக்கு வந்து தரைதட்டி நிற்கும். பயன்படாமல் பாழாகிவிடும். அல்லது கடலுக்குள் புயலில் சிக்கி அமிழ்ந்து போகும். அழிந்து போகும்.

அதுபோலவே வாழ்க்கையைத் தொலைத்தவர் களும், மீண்டும் ஒரு அழகான முகத்தைப் பெறுவ தென்பது மிக மிகக் கஷ்டமாகும். ஏனென்றால் முகமானது முப்பது சிறு சிறு தசைத் துண்டுகளால் உருவாக்கப்பட்டிருப்பதாம். அதற்குச் சரியான பிராண வாயுவும், சரியான உணவும் கிடைக்காவிடில் நாளாக, நாளாக, அமைப்பில் நலிந்து நாசமாகி விடுவதால், அவை குற்றுயிராய்க் கிடக்குமே தவிரப் புத்துயிர் பெற்றுப் பொலிவு பெறுவது அரிதான ஒன்று.

பிறகு வசதியும், வாய்ப்பும் வந்தாலும், இழந்த வாழ்வை ஈடுகட்டிக் கொண்டாலும், உடல் அமைப்பில் கொஞ்சம் மாறுதல் உண்டாகலாமே தவிர முக அழகில் மந்தகாசம் தெரியாது. மங்கலான வெறும் மலுங்கலான தோற்றமே முகத்தில் தென்படும். அதனால்தான் முகம் என்னும் இரகசிய வார்த்தை மனிதர்களிடையே பிரபலமாக விளங்குவதுடன், மக்களால் அடிக்கடி பேசப்படுகிற மாதவச் சொல்லாகவும் விளங்குகிறது.

☐☐☐