பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


61

இரகசியம் - 7 உறக்கம்

வெளிச்சத்தை விழுங்குகின்ற திமிங்கிலமாய் விளங்குவது இருட்டாகும். திருட்டுத்தனமாக வரும் இருட்டு என்பார்கள். இல்லை அது தேனிசை பாடும் தேவதையாக மக்களைத் தேடி வருகிறது.

மனச்சாந்தியை உங்கள் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கிறது. சிங்காரம் பேசுகிற சபலத்தை, சூறாவளியாக வீசுகிற சலனத்தை, உங்களிடமிருந்து கழற்றிவிடக் கை கொடுக்கிறது.

மண்ணின் மைந்தர்களே! ஆறறிவு ஜீவிகளே! அகிலத்தை ஆளவந்த அற்புதப் பிறவிகளே! உங்கள்தேகம் அக்னியின் ஊற்றுதான். உங்கள் நெஞ்சம் அக்னிப் பிழம்புதான்.

உங்கள் நினைவுகள் அக்னி ஜூவாலைதான், என்றாலும் அக்னி அனலில் நீங்கள் உருக வேண்டாம்.