பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5

இயற்கையோடு இணைந்து வாழ்வது என்பதை எல்லாம் ஆலங்கரை விளக்கமாகக் கண் முன்னே நின்று களிப்போடு வழி நடத்துகின்ற மந்திரச் சொற்களை, மனம் கவர்ந்த இரகசியச் சொற்களாக உங்கள் முன் படைத்திருக்கின்றேன்.

வாசகர்கள் இதை மிகவும் ஆர்வமாகப் படித்து, ஆழமாகச் சிந்தித்து, அறிவோடு பின்பற்றுகிறபோது கிடைக்க வேண்டிய எல்லா இன்பங்களும், நன்மைகளும் கிடைக்கும். கேடுகளையும் பாடுகளையும் துடைக்கும். உணர்ச்சிகளின் சேட்டைகளையும் ஓட ஓட விரட்டவும் செய்யும்.

இந்தப் பெறுதற்கரிய வாய்ப்பைப் பெறுங்கள். கற்று

மகிழுங்கள். பெற்றுத் திகழுங்கள் என்று இந்த நூலை, உங்கள்

வசம் உங்கள் கரங்களில் ஒப்படைக்கின்றேன். ஒளிதீபமாய் இந்த

இரகசியங்கள் உங்கள் உள்ளத்திலே உயிர்ப்புச் சக்தியை

ஏற்படுத்தட்டும். இனி நீங்கள் படிக்கத் தொடங்கலாம். அன்பான வாழ்த்துக்கள்.

அன்பன், எஸ்.நவராஜ் செல்லையா

டிசம்பர் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல்

பதிப்பில் ஆசிரியரின் முன்னுரை அப்படியே அச்சிடப் '-டுள்ளது.