பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

69


ஆடைகளை வாடகைக்கு வாங்கி அணிந்து கொண்டு வந்தேன்.

எனக்குப் பலமான வரவேற்புத் தந்து பந்தியிலே உட்கார வைக்கிறார்கள். இது என்ன நியாயம் ஒரு மனிதனுக்கு மரியாதையில்லை. இந்த ஆடைக்கென்ன அவ்வளவு கெளரதை” என்று கூறியவனை நோக்கி ஒரு பெரியவர் சொன்னார்.

“தம்பி ஆடை இல்லாதவன் அரை மனிதன். அவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் குறை மனிதன்தான். முழு மனிதன் இல்லை’ என்றார்.

'ஆடை' என்றாலே ‘உயர்ந்த வெற்றியைத் தருவது’ என்று அர்த்தம். 'ஆ' என்றால் வெற்றி. 'டை என்றால் உயர்ந்த என்று அர்த்தம். உயர்ந்த வெற்றியை அடைபவனுக்குத்தான் ஆடவன் என்று பெயர். ஆடவன் என்றால் வெற்றியாளன் என்று அர்த்தம்.

இப்படிப்பட்ட ஆடவன் என்ற வார்த்தை எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? கக்கூஸ் என்கிற சுவற்றில். ஒரு மனிதனின் படத்தைப் போட்டு, அதற்குக் கீழே ஆடவன் என்று எழுதி வைக்கிறார்கள். பேசப்படுகிற வார்த்தைகளுக்கும், இடங்களுக்கும் ஏற்ப நிலைகளுக்கும் ஏற்ப மரியாதை கிடைக்கும் என்கிறார்கள்.

ஆடை என்பதைத்தான் 'உடை’ என்று சொல்லுகிறார்கள். உடலுக்கு உடுப்பதினால் அதை உயர்வாக அமையும்படி பார்த்துக்கொள் என்பதற்காகவே அதற்கு