பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72

இரகசியம் - 9 இயற்கை

ஒருவரைப் பார்த்து அவர் இயற்கையாக இருக்கிறார். இயற்கையாகவே இருக்கிறார் என்பார்கள். இன்னொருவனைப் பார்த்து அவர் இயற்கையாகவே மாறிவிட்டார். இவனுக்கும் இயற்கைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லையென்று மக்கள் இயற்கையாகப் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். இந்த இயற்கை என்ற வார்த்தை எல்லா மனிதர்களின் வாயிலும் சரளமாக வந்து போகிறது.

அந்த வார்த்தை இதயத்தில் சுரந்து, எண்ணமாக மலர்ந்து, வார்த்தை வடிவெடுத்து வருகிறதா? இல்லை பேசுபவர்கள் தங்களை அறியாமல் பேச்சு வாக்கில் இந்த வார்த்தையை உச்சரிக்கிறார்களா என்றால் இந்தச் சந்தேகத்திற்குப் பதில் கிடையாது.

இயற்கை என்பது அணுக்களாகக் கலந்து கிடப்பவை. செல்களாக நீந்திக் களிப்பவை. தசைகளாக விசைபெற்று