பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

73


ஒளிர்பவை. எலும்புகளாக வலிமையோடு நிற்பவை. நரம்புகளில் மின்னலோட்டமாகத் தொடுப்பவை. உயிர் மூச்சாக உலா வந்து கொண்டு இருப்பவை. என்பதால்தான் இயற்கை உடம்பிலே இரகசியமாக இரண்டறக் கலந்திருக்கிறது. அதிசயமாக யாரும் அறியாமல் உள்ளே ஒருங்கிணைந்து சிரிக்கிறது.

இயற்கை என்றால் என்ன. மனிதன் என்பவன் யார்? எண்ணிலா ஜீவராசிகள் எத்தனையோ கோடியிருக்கின்ற இயற்கையில், இயற்கைக்கும் மனிதனுக்குமென்ன அவ்வளவு நெருக்கமான தொடர்பு. இயற்கை ஏன் மனிதனை தொட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனும் ஏன் இயற்கையோடு ஒட்டிக் கொண்டே இருக்கிறான்.

இப்படிப்பட்ட இடக்கு முடக்கான கேள்விகளுக்கு ஒரே பதில், இயற்கையாக இருந்து மனிதர்களுக்கு எல்லா வகையிலும், எல்லா நிலையிலும், எல்லா முறையிலும், ஏற்ற உதவிகளை உற்ற நேரத்தில் அது உதவிக் கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை.

இயற்கை என்றால் என்னவென்று பொருள் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால், இயற்கையை இன்னும் நாம் அருகி, உருகி, ரசிக்க முடியும்.

இயற்கை என்றால், குணம், சுபாவம், தகுதி, பாக்கியம், வழக்கம், இலக்கணம், கொள்கை என்று பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்களை இங்கே சற்று விரிவாகக் காண்போம்.