பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா •o- 79

- - - - -

3. இயற்கையில் நீர்ப்பரப்பிற்கு மேலே நிலவுகிற பகுதி வெப்பம், சூடாகிய தீப்பகுதி போலவே, வயிற்றுக்கு மேலே உள்ள நெஞ்சுப் பகுதியானது தீப்பகுதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த நெஞ்சுப் பகுதிக்குள்ளேதான் கதகதப்பான உணர்வுகள், நெருப்பாகச் சலனங்கள். திக்கெட்டும் தாக்கித் தகர்க்கும் சபலங்கள். உறுப்புக்களைக் கருகி, உருகவைக்கும் கவலைகள்.

இப்படி, அனலைப் பரப்பும் அடுப்புத்தளமாக இயங்கும் பகுதியைத்தான் நெஞ்சுப் பகுதியென்று நாம் அழைக்கிறோம். அந்த தீப்பகுதியில் எப்போதாவதுதான் குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் இருக்கும். எப்போதும், வெப்பமும், வேதனையும், தீபமும்தான் இருக்கிறது.

4. நிலம், நிலத்திற்கு மேலே நீர், நீருக்கு மேலே நெருப்பு, இப்படி அமைக்கப்பட்ட அமைப்பின் நான்காவது பொருளாகக் காற்று என்ற பகுதி இருக்கிறது. கார் என்ற சொல்தான் காற்றாக மாற்றி வந்திருக்கிறது.

இந்தக் காற்றுதான் ககனம் முழுவதையும் காத்து வருவதால் இது ஆக்குகிற பொழுதுக்குக் காலம் என்று பெயர். இந்தக் காலம் என்ற சொல்லில் இருந்துதான் 'காலன் அதாவது எமன் என்ற சொல் வந்திருக்கிறது.

காலம் பார்த்து வந்து உயிர்களின் காற்றைப் பிடித்து மூச்சை நிறுத்துவதால் அவனுக்குக் காலன் என்று பெயர் வந்தது.