பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா ふ 81

பிடித்தாற்போன்ற பிதற்றல்கள், பேரிடியாக இருக்கின்ற விஷயங்கள்.

இப்படியாகத் தலைப்பாகம், தலை போகிற வேகத்தில் தத்தளித்துக் கொண்டு இருப்பதை நீங்கள் பார்க்கும்போது, இதுதான் இயற்கையின் அமைப்பும், மனிதனின் தேக அமைப்பும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

வானத்திலே எத்தனை சப்தம் இருந்தாலும் அதை அமைதியான இடமென்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். ஆனால் மனிதரின் தலை வானத்திலே குலை, குலையாய் ஞானம் பூத்துக் குலுங்கினாலும், நடப்பதும் தொடுப்பதும் ஈனமாக அல்லவா இருக்கிறது.

இயற்கை ஏன் இப்படிப் பசுமையாகவும், இளமையாகவும், வளமையாகவும் காட்சி தருகின்றது என்றால் அதனுடைய இயக்கந்தான் அதன் மறைந்து கிடக்கும் ரகசியம். இயற்கை உலகத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அதற்குப் பெயர் அண்டசராசரம்.

அண்டம் என்பது இயற்கையிலுள்ள அத்தனை பொருளும் அண்டிக் கிடப்பதால்தான். அந்த அண்டம், பிண்டமாகி பிரிந்தபோதுதான் அதற்குக் கண்டம் என்று பெயர் வைத்தார்கள். அந்தக் கண்டம் முழுவதும் இயற்கைதான் ஆட்சி புரிகிறது. இயற்கையின் ஆட்சியைத்

தான் சராசரம் என்றார்கள்.

சரம் என்றால் இயக்கம் (Movement) அசைவு எப்பொழுதும் அசைந்து கொண்டு இருப்பதற்குப்