பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



பெயர்தான் சராசரம். சதா அசைவோடும், ஆட்டத் தோடும், ஒட்டத்தோடும் இருப்பது போலவே, மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனைச் சராசரி மனிதன் என்றார்கள்.

சராசரி மனிதன் என்றால் (Average) ஆவரேஜ் என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ப்படுத்தி சராசரி என்று சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு அபத்தமான மொழிபெயர்ப்பு அல்லவா.

மனிதன் இயற்கையின் அழகில் மயங்க வேண்டும் என்பது அல்ல. இயற்கையைப் போல் இயங்க வேண்டும் என்பதுதான் முக்கியமான சாராம்சம். இயற்கை என்பது இயல்+கை என்று பிரிகிறது.

'இயல்' என்றால் ஒழுங்கு, ஒடுக்கம், 'உலக ஒழுக்கம்' என்றெல்லாம் பொருள் உண்டு 'கை' என்றால், ஒழுக்கம் என்ற பொருளிலிருந்தாலும் வலிமையாற்றுகின்ற மற்ற பொருள்களும் உண்டு.

ஆற்றல் என்றால் வெற்றி என்று அர்த்தம். ஆக இயற்கை என்றால், ஒழுக்கத்தின் வலிமை, ஒழுக்கத்தின் வெற்றி, ஒழுக்கத்தின் ஒடுக்கம் என்றெல்லாம் நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இயற்கை என்றால் ஒழுக்கத்தின் வெற்றி. அதாவது இயற்கை நடத்துகின்ற செய்கையின் வெற்றி, செய்கைக்குக் கிடைக்கின்ற வெற்றி, செயலுக்குக் கிடைக்கின்ற மேன்மை நிலை.

ஒருவன் இயற்கையைப் பின்பற்றுகிறான் என்றால் அவன் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறான் என்று அர்த்தம்.