பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

89



பிறந்ததற்காகத்தான் எல்லோரும் வாழ்கிறோம் என்கிறார்கள். ஆனால் நாம் அப்படியல்ல. “நான் ஏன் பிறந்தேன்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு நம்பிக்கை இல்லை.

வாழ்க்கையை வாழுகின்ற சக்தி, வாழ்க்கையை ஆளுகின்ற சக்தி, வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து மீளுகின்ற சக்தி, வாழ்க்கை வாழ்ந்து காட்டுகின்ற வளமான சக்தி, நம் ஒவ்வொருவரிடையேயும் நிறையவே இருக்கிறது.

அந்த நினைவு ஒளிய நெஞ்சம் முழுவதும் நிரப்பி, நெடிய இந்த வாழ்க்கையை, நிம்மதியாக வாழ வைக்க உதவுவதற்காகவே இந்தக் குறிப்பை இங்கே எழுதுகிறோம்.

எந்த நேரத்திலும் என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் எப்பொழுதும், ஒருவிதப் பிடிப்பும், துடிப்பும் இருக்க வேண்டுமே தவிர வெறுப்பும், எரிச்சலும் ஏற்படக் கூடாது.

எப்படி வாழ்ந்தால் நம் வாழ்வு இதமாக இருக்கும், பதமாகத்துலங்கும் என்று நீங்கள் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகப் பொய் வாழ்க்கையோ, போலி வாழ்க்கையோ வாழக் கூடாது. நம் வாழ்க்கைக்கென்று ஒரு எல்லை உண்டு.

அந்த எல்லையின் அளவை நீங்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அப்படி நிர்ணயிக்கப்பட்ட