பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


வாழ்க்கையைத்தான் இலட்சிய வாழ்க்கை என்பார்கள். இந்த இதயங்கவர்ந்த இலட்சிய வாழ்க்கையை ஏதாவது காரணம் காட்டிக் கழட்டிவிட்டு விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுக்கிற சிற்பியாக நீங்கள்தான் இருக்க வேண்டுமே தவிர வாடகைக்கு ஆள் பிடிப்பது போல் யாரையும், எதையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

உங்கள் மனதுக்குள்ளே நான் ஒரு மனிதன்தான் என்ற நினைவை அகற்றாமல் உறுதிப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

மனிதன் என்பவன் மங்கலகரமானவன். மகிழ்ச்சி கரமாக வாழ்பவன். மனப்பூர்வமான அனுபவித்து, திருப்தியடையக்கூடியவன். மற்றவர்கள் மனம் விரும்புவது போலக் காரியங்களைச் செய்பவன். இந்த எண்ணமும், செயலும், ஒரு மனிதனிடம் இருக்கின்ற வரையில் அவன் நல்ல மனிதனாகவே இருப்பான்.

மனம் போல் வாழ்வு என்கிறார்களே! மனம் போல் வாழ்வு என்பது, மனம் போலச் சுவாசித்தல் என்ற அர்த்தம். வாங்குகிற மூச்சிலே, வக்கிரமோ நெருடல் களோ இல்லாமல் இருந்தால் அவர்கள் விடுகிற சுவாசமும் இயல்பாக ஒழுங்காக இருக்கும்.

சுவாசம் சீராக நடைபெற்றுக் கொண்டிருகிறவரை, இதயத்தின் இரத்த இறைப்பு பெரிதாகவே நடக்கும். நாம் எண்ணிப்பார்க்கின்ற கன நேரத்திற்குள்ளாக இரத்த ஓட்டம் சுற்றிச் சுற்றி வந்து செல்கள் சேகரித்து வைத்திருக்கும் அசுத்தங்களை அகற்றிவிட்டு வருகின்றன.