பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 ... உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

-

வைக்கும். நலமாக இருக்க வைக்கும். வற்றாத ஜீவநதிபோல, உங்களை வாழ்விக்கும். உங்கள் வாழ்வை மகிழ்விக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்கள் என்ன வழிகளைக் காட்டுகின்றன. எப்படி நம்மை வாழ வேண்டுமென்று போதிக்கின்றன என்று பார்ப்போம்.

எல்லா மதங்களும் மக்களை இப்படிப்பட்ட மனோகரமான சூழ்நிலையில் வைத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்குந்தான் முயற்சிக்கின்றன.

மதம் என்றால் கொள்கை என்பார்கள். மதம் என்றால் அடங்காத திமிர் என்பார்கள். இது பொதுவாக புத்திசாலிகள் தருகின்ற தகவல்.

ஆனால் மதம் என்ற சொல்லைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அதில் எவ்வளவு ஆழமான அர்த்தங்கள் பொதிந்து இருக்கின்றன என்பது புரியும்.

'மதம்' என்ற சொல்லை 'மது ' + 'ஆம்' என்று பிரிக்கலாம். மதம் என்ற சொல்லை 'ம' + 'தம்' என்றும் பிரிக்கலாம். மீண்டும் ம+தம் என்றும் பிரிக்கலாம். அப்படி என்றால் அர்த்தம் வேறு வேறாகத்தானே வரும்.

மது என்பது அழகான மயக்கம் தரக்கூடிய பொருள் என்றும் திரவமென்று அர்த்தம். 'ம' என்றால் காலம். தம்' என்றால் தம் பிடித்துக் காலமுழுவதும் காப்பாற்றுதல் என்று அர்த்தம்.