பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 * உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்

பாடுவார்கள். இந்த ஆமென் என்ற சொல்லை நன்கு வாயைத் திறந்து ரீங்காரமிட்டுப் பாடுகின்ற பொழுது, உள்ளே இருக்கின்ற காற்று வெளியே வந்துவிடுகிறது.

அதுபோல இஸ்லாமிய மதத்திலேயும் அல்லாஹீ அக்பர் என்று ஓங்கிக் குரல் கொடுத்து ஒதும் பொழுது, காற்றை வெளியே விடுகின்ற வேலை கச்சிதமாக நடந்தேறுகிறது.

ஆக, எல்லா மதங்களுமே சுவாசத்தைச் சுகமாக்கிச் சுக வாழ்வை நீட்டிக்கும் பணியைச் சுகமாகச் செய்து கொண்டு வருகின்றன. நம் தமிழ் மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு மதத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பின்பற்றிப் பேரின்பம் அடைகிறார்கள்.

இந்தச் சுவாசக் கலையை இன்றிலிருந்து நீங்கள் மதத்திற்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு மனம் போல வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இந்த சுவாசக்கலை தேகத்தின் வெப்ப நிலையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. தேகத்தில் தண்ணிர் அளவை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது. தேகத்திலுள்ள வெப்பத்தின் அளவையும், சிறப்பாக வைத்திருக்க வழிவகை செய்கிறது.

ஆக உடலாலும், உயிராலும், உணர்வாலும் உற்சாகமாக வாழ வைக்கும் இரகசியங்களின் ஈடில்லா மேன்மைகளை உணர்ந்து இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்று உங்களை வாழ்த்துகிறேன்.

חחח