உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104


6. ஆட்டம் மகிழ்ச்சியையே அளித்தாலும், ஆட்டத்தின் விதிகளை யாரும் மீறாதபடி, கட்டுப்பாட்டுக்குள் அடங்கி ஆடுகிறபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. ஆசிரியரும் பங்குபெறுகிறபோது, மாணவர்க்கு உற்சாகமாக இருக்கும்.

8. தோற்கிற குழுவைத் தேற்றுவதும்,வெற்றிபெறுகிற குழுவை வாழ்த்துவதும் ஆசிரியர் கடமையாகும்.

9. விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பாக, இடத்தை சரி செய்து தேவையான உதவிப் பொருட்களை ஆசிரியர் சேமித்து வைத்திருப்பது, சிறப்பான நிர்வாகத் திற்கு உத்திரவாதமளிக்கும்.

5 முதன்மை விளையாட்டுக்கள் (Major games)

மிகவும் நுண்மையும், வலிமையும் நிறைந்த திறமைகள்: விரிவுபடுத்தப்பட்டு வற்புறுத்துகின்ற விதிமுறைகள்: அதிகமான தரமான இடவசதி; தேர்ச்சியும் செழுமைநிறைந்ததுமான உதவி சாதனங்கள்; குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகள்: இப்படித்தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டாய நியதிகள்; இவ்வளவு ஆட்டக் காரர்கள் இருக்க வேண்டும் என்ற விதிகள் கொண்டவையே. முதன்மை விளையாட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

போட்டியிடுகின்ற உணர்வுகளுக்குத் தீனிபோடுவது போல, குழுவாகக் கூடி ஆடும் வாய்ப்புக்களை இவை வழங்குகின்றன.

நரம்புத்தசைகள் ஒருங்கிணைப்பு ஆற்றல்; வளர்ச்சி பெறுகிற திறமைகள்; கிளர்ச்சி கொள்கிறதிறன் நுணுக்கங்கள் தலைமைப் பதவிக்குத் தகுதி தரும் சந்தர்ப்பங்கள்