பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஆட்டத்திற்குப் பிறகு அனைவரும் ஒன்றுகூடி, கலந் துரையாடினால், அது அவர்களின் திறமை வளர உதவும்.

6. தாள லய செயல்கள் (பயிற்சிகள்)

நளினமான உடல் இயக்க அசைவுகளை, நடனம் என்பார்கள். அதனைதாளமும் லயமும் நயமாக இணையச் செய்திட வேண்டும். ஆடிட வேண்டும்.

பரதநாட்டியம், கதகலி, மணிப்புரி, குச்சிப்புடி போன்றவை உயர்தரமான அபிநய நடனங்களாகும். (Classical Dance)

கும்மி, கோலாட்டம், பாங்க்ரா போன்ற நடனங்கள் குழுவாக ஆடுகிற கிராமிய நடனங்களாகும். (Folk dance)

உடற் பயிற்சிகளை மிகவும் ஒய்யாரமாக கண்கவர் முறையில் ஆடுகிற ஜிம்னாஸ்டிக்ஸ், லெசிம் போன்றவைகள்யாவும், தாளலயச் செயல்களுக்கு உதவுவனவாகும்.

தாளலய இயக்கங்களை முன்னேற்றம் தரும் பகுதி முறை கற்பிக்கும் வழியில் (Progressive part method) கற்பிக்கலாம்.

ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு காலடியாகக் (Step) கற்பிப்பது நல்லது.

முதல் காலடியைக் கற்பிப்பது (Step 1) பிறகு, இரண்டாவது காலடி இடுவதைக் கற்பிப்பது (Step 2). பிறகு முதலிரண்டு காலடிகளைக் கற்பித்து, 3வது காலடியைக் கற்பிப்பது. இப்படியாக, ஒவ்வொன்றையும் தனித்தனியே தெளிவாக, கூட்டாகக் கற்பித்தால், சிறந்த பயனை எதிர்பார்க்கலாம்.