பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. பாடப் பொருளும் கற்பிக்கும் முறையும் (MATTER AND METHODS) கற்பிக்கும் கலை கல்வியைக் கற்பிப்பது என்பது ஒரு கலை. கற்பிக்கும் காரியத்தை மேற்கொள்கின்ற ஆசிரியர், அதனை புனிதமான பணியாகவே, கருதி பெருமிதம் பொங்கப், பணியாற்றுகிறார். கல்வியைக் கலையாகக் கற்பிக்கும் ஆசிரியரை, கலைஞன் எனவும், புகழ்ந்து பேசுகின்றார்கள். கல்லைச் செதுக்கி, தன் கற்பனையுடன் சிலையாக வடித்துக் காட்டுகிற சிற்பியைப்போல, மனித உள்ளங்களை கல்வியின் மூலம், செப்பனிட்டு. சீர்மைபடுத்தி, சிறப்பு நிலைக்கு உயர்த்துகிறார் ஆசிரியர். - ஆகவே தான், நல்ல ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நிலைக் கண்ணாடியாக விளங்குகின்றார்கள். அவர்கள் மனதிலே ஆழமாய் பதிந்து, கோபுரமாய் உயர்ந்து, குன்றிலிட்ட தீபம் போல வழி காட்டி வாழ்விக்கின்றார்கள்.