பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


109 3. அவசரம் இல்லாமல், நிதானமாக, கவனத்துடன் மாணவர்களை செய்யச் சொல்ல வேண்டும். எண்ணிக்கையில் கோபுரப் பயிற்சிகள் செய்யும் முறை எண்ணிக்கை 1 : பயிற்சி செய்கிற மாணவர்கள், வர போக வசதியாக, முதலில் வரிசையில் நின்று கொள்ள வேண்டும். எண்ணிக்கை 2: விசிலுக்குப் பிறகு, அடித்தளத்தில் இருப்பவர், அதற்கு மேல் இருப்பவர். அதற்கும் மேலே என்று வந்து, இருந்து கொள்ள வேண்டும். எண்ணிக்கை 3: எல்லோரும் வசதியாக இருந்தபிறகு, விசில் ஒலி கேட்டதும், கோபுர முழு வடிவைக் காட்ட வேண்டும். எண்ணிக்கை 4: விசிலுக்குப் பிறகு, கோபுரம் கட்டிய முறைபோலவே, இறங்கி கலைந்து செல்ல வேண்டும். குறிப்பு : 1. வயதுக்கேற்றவாறு, இனத்திற்கேற்றவாறு (Sex) பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 2. மெத்தைபோன்ற விரிப்புகளை, பாதுகாப்பு நிலைைைளக் கவனித்து செய்து கொள்ளவும். 2. விரைவியக்க ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் (Dynamic) கற்பிக்கும் முறைகள் 1. தேர்ந்தெடுக்கும் பயிற்சிகள் எளிதாக இருந்து, பின் கஷ்டமானதாக இருக்குமாறு அமைய வேண்டும். 2. ஆசிரியர் சொல் விளக்கத்துடன், செயல் விளக்கத்தையும் முழுமையாக, சரியாக செய்து காட்ட வேண்டும்.