பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 15 அ) காலால் போடும் மல்யுத்தம் (Leg Wrestling) ஆ) கைத்தடி கொண்டு மல்யுத்தம் (Wand Wrestling) ®) a» & um á Gum ®ü udâ u$&ub (Hand Wrestling) இன்னும், இரட்டையர் போடக்கூடிய சிறுசிறு போட்டி களும் உண்டு. அவற்றை மாணவர்களுக்குக் கற்பித்து, மல்யுத்தத்தில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் அதிகப்படுத்தி, ஆசிரியர் திறமையாகக் கற்பித்துப் பயன் சேர்க்கலாம். 3. கம்புச் சண்டை கம்புச் சண்டையை சிலம்பாட்டம் என்றும் கூறுவார்கள். தைரியம், தன்னம்பிக்கை, விழிப்புணர்ச்சி, வீரமுடன் செயல்படுத்தல் போன்ற இயற்கையான குணங்களை, மெருகேற்றி வளர்த்துவிடுகின்ற ஆற்றல், சிலம்பாட்டத் திற்கு உண்டு. எதிர்கால வாழ்க்கைக்கு கம்புச் சண்டை பயன்படும் என்பதால், பள்ளி மாணவர்களுக்கு, அறிமுகப்படுத்துவதில் தவறேதும் இல்லை வளைகோல் பந்தாட்டத்தில் பயன்படும் கோலை, லாவகமாக இயக்குவதுபோல, சிலம்பையும் லாவகமாக சுழற்றும் தன்மை எளிதாக மாணவர்களுக்கு ஏற்படும். இதற்கு கால் இயக்கம்; கம்புடன் உள்ள கை சுழற்றல்; அதற்கான நிற்கும் நிலை. இவற்றைக் கற்றுத் தருகிற ஆசிரியர், தவறுகள் செய்கிற மாணவர்களைத் திருத்தி, ஊக்குவித்துக் கற்பிக்க வேண்டும்.