உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116


தனித் தனியாக ஒவ்வொரு திறமையையும் கற்றுத் தந்த பிறகு, இருவர் இருவராக கம்புச் சண்டை போடச் செய்யலாம்.

தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள் இருவரும், சம அளவில் திறமையுள்ளவர்களாக இருப்பவர்களாக இருந்தால், போட்டியும் நன்கு அமையும். ஆபத்தும் அதிகம் ஏற்படாது.

தாக்கவும், தடுக்கவும் கூடிய நிலையில் காயம் ஏற்படலாம். முதலுதவிப் பெட்டி கைவசம் வைத்திருப்பது நல்லது.

9. ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகள்

ஒவ்வொருவர் உடலிலும் நிறைந்து ஊடாடிக் கொண்டிருக்கின்ற இயற்கையான செயல்களான ஒடுதல், தாண்டுதல், எறிதல் போன்றவற்றை, வளர்த்து விடவும், வலிமை கொள்ளவும் , மேன்மை பெறவும் உதவுகின்ற முறைகளே, ஒடுகளப் போட்டிகள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.

ஒடுகளப் போட்டிகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பிரிவில் உள்ள நிகழ்ச்சிக்கும் தனித் தனியேயான திறன் நுணுக்கங்கள் இருக்கின்றன.

ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கேற்ற திறன் நுணுக்கங்களையும், கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கேற்ற அறிவு நிலை, ஆற்றல் நிலை, எழுச்சி நிலை, ஏற்ற நிலை முதலியவற்றை அறிந்துகொண்டே, அதற்கேற்ப கற்பிக்கவேண்டும்.

மாணவர்களுக்குக் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை நிறைய நல்கி, அவ்வப்போது ஏற்படும் குறைகளைத்-