117
திருத்தி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து, கற்பித்திட வேண்டும்.
சில குறிப்புக்கள்
1. உடலை நன்கு வேகமாகவும், தீவிரமாகவும் ஒரு நிகழ்ச்சியில் ஈடுபடுத்துவதால், மாணவர்களுக்கு பதப் படுத்தும் பயிற்சிகளை கொடுக்காது, எந்த நிகழ்ச்சியையும் செய்யுமாறு கூறக் கூடாது.
2. மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம், பாதுகாப்பாகக் கற்பிக்க வேண்டும் (தாண்டுதல், எறிதல் திகழ்ச்சிகள்)
3. முதலுதவிப் பெட்டியைத் தயாராக வைத்திருக்கவும்.
பழுது படாத சாதனங்களாகப் பார்த்து, பயன்படுத்திட வேண்டும்.
இனிமேல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய முக்கிய திறன்கள் (Skills) என்னென்ன என்பதை மட்டும் கொடுத்துச் செல்கிறோம். ஆசிரியர்கள் மேலும் விளக்கமாக அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு போதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
1. ஓட்டத்திற்கான கிகழ்ச்சிகள்
ஒட்ட நிகழ்ச்சிகளை மூன்று நிலையாகப் பிரிக்கலாம்.
1. விரைவோட்டம் (Sprint)
2. இடை நிலை ஓட்டம் (Middle distance Race)
3. நெடுந்தூர ஒட்டம் (Long distance Race)