உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

விரை வோட்டத்தை ஓடத் தொடங்குபவர்கள், மூன்று வகையாக அமர்ந்திருந்து ஓடத் தொடங்குவர். அந்த ஓட்டத் தொடக்கத்திற்குரிய பெயர்கள்

அ) குவி நிலைத் தொடக்கம் (Bunch Start)

ஆ) இடை நிலைத் தொடக்கம் (Medium Start)

இ) நீள் நிலைத் தொடக்கம் (Long Start)

இந்த மூன்று நிலைகளிலும், எவ்வாறு அமர்வது என்பதை ஆசிரியர், மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

ஓட உதவும் சாதனத்தில் (Starting Block) எப்படி அமர்வது என்பதையும் பயிற்சியளிக்க வேண்டும்.

ஓட விடுபவர் (Starter) எப்படி ஓட விடுவார்? அவரது கட்டளைகள் எப்படி எழும் என்பதையும் விளக்க வேண்டும்.

உங்களிடத்தில் உட்காருங்கள் (on your marks)

தயாராக இருங்கள் (Set)

ஓடுங்கள் அல்லது துப்பாக்கி ஒலி (Go or Gun)

எப்படி ஓட வேண்டும் என்பதையும் ஆசிரியர் விளக்க வேண்டும்.

மூன் பாதங்கள் மட்டுமே தரையில் பட, கைகள் இரண்டையும் முன்னும் பின்னும் விரைவாக வீசி ஓட வேண்டும்.

ஓட்டத் தொடக்கத்தில் இருந்த வேகத்தை விட, ஓட்ட எல்லையை நெருங்க நெருங்க, அதிக வேகத்துடன் பாய்ந்தோட வேண்டும்.

எல்லைக் கோட்டைக் குறிக்கும் நாடாவை முதலில் தொட முயற்சிக்க வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூற வேண்டும்.