பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

நீண்டதூர ஓட்டத்தின் தொடக்கத்திற்கு,

உங்களிடத்தில் நல்லுங்கள் என்று கூறியவுடன் துப்பாக்கி ஒலி கிளம்பும். உடனே ஓடத் தொடங்க வேண்டும் என்பதையும் மாணவர்களுக்குக் கூற வேண்டும்.

இனி தாண்டும் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்

தாண்டுகின்ற நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகளை மட்டும் இங்கே கூறியிருக்கிறோம். அவற்றை எவ்வாறு செயல் படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்குவது முக்கியம் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறோம்,

குறிப்பு மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் நான் எழுதியிருக்கும் "நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் என்ற புத்தகத்தைப் படித்து பயன்படுத்திக் கொள்ளவும்.

1. நீளம் தாண்டல் (Broad jump)

தாண்டுவதற்கு முன், தேவையான பதப்படுத்தும் பசிற்சிகளைச் செய்யச் சொல்லவும்.

தாண்டுவதற்குறிய வலிமையான கால் (Strong leg) எது என்பதைக் கண்டறிய, மாணவர்களை பல முறை ஓடி வந்து தாண்டச் செய்து, கண்டுபிடித்திடச் செய்யவும்.

மெதுவாக முதலில் ஓடி வந்து தாண்டச் செய்யவும், மணற்பரப்பைப் பார்த்தே தாண்டாமல், மேலே பார்த்து தாண்டச் சொல்லவும்.

உயரமாக 8 அடிக்குள்ளாக ஒரு பலூனைக் கட்டி விட்டு, ஓடி வந்து துள்ளி தாண்டுகிறபோது, தலையில் பலூனை