பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

இடிப்பது போல உயரமாகத் தாவிக் குதிக்கச் செய்யவும். (Heading the baloon)

தாண்டி மணற் பரப்பில் குதிப்பதற்கு முன், காற்றில் நடப்பது போல, கால்களை முன்புறமாக நீட்டிக் காலுன்று மாறு பழக்கவும் (Hitch Kick)

நான்கு பிரிவுகள் இதில் உண்டு.

1. உதைத்தெழும் பலகை வரை ஓடி வருதல் (Approach)

2. பலகையில் உதைத்தெழல் (Take-off)

3. காற்றில் நடத்தல் (Walking in the air)

4. மணற்பரப்பில் காலூன்றல் (Landing)

அணுகு முறைக்கு 16 தப்படி காலடி முறை (16 Steps) அல்லது 20 தப்படி காலடி முறையைக் கற்பிக்கவும்,

2. மும்முறைத் தாண்ட ல் (Triple Jump)

பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகு, நின்று கொண்டே மும்முறைத் தாண்டும் பயிற்சியைத் தரவும். (Standing Triple Jamp).

இதற்கு நீளத்தாண்டல் போல ஓடி வந்து, வலிய காலால் தாண்டி அதே காலில் தரையில் ஊன்றி, (Hop) அடுத்த காலில் ஒரு தப்படி வைத்து, பிறகு, (Step மணற் பரப்பில் இரு கால்களாலும் காலூன்றுதல் (Jump).

இந்த முறையை ஓடி வந்து செய்யச் சொல்லவும்.