பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


盈2魯 இரும்புக் குண்டினை நின்று கொண்டு எறிவதற்குப் பயிற்சி அளித்தல். எடை குறைந்த இரும்புக் குண்டைப் பயன்படுத்தி, எறியப் பழகுமாறு வாய்ப்புகளைக் கொடுத்தல். இதனால், எறியும் மாணவர்களுக்கு, மனத்தெம்பினை வளர்த்திட முடியும். பிறகு, கையில் வைத்திருக்கும் குண்டினை, எப்படி விரல்களால் தள்ளிட வேண்டும்? (Finger Flip) என்பதை விளக்கி, எறியுமாறு பழக்குதல். நின்று கொண்டே, இரும்புக் குண்டை விரல்களால் தள்ளி, உயரே உயரமாக எறிந்து பழகுதல். அதற்காக, அதாவது எறிவதற்கு முன் நிற்கும் நிலை (Stance) Lp(536). உடல் சக்தியை முழுவதும், இரும்புக் குண்டினை எறியும் கைக்குக் கொண்டு வரப் பயிற்சியளித்தல். குண்டை எறிந்த பிறகு, உடல் சமநிலையை இழக்காமல் வட்டத்திற்குள்ளே நின்றிடப் பயிற்சியளித்தல். இப்படி ஒவ்வொரு திறனையும் கற்றுத் தந்து, பிறகு மொத்தமாக அனைத்துத் திறனையும் செய்ய வைத்தல். 2. or 6't soci (Discus Throw) பதப்படுத்தும் பயிற்சிகளை அளித்தல். தட்டினை எவ்வாறு விரல்களால் பற்றிப் பிடிப்பது என்ற முறையை விளக்குதல்.