பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 25 முதற்கட்டமாக, எறிதட்டினை, விரல் சக்தியைப் பயன் படுத்தி, தரைமீது ஒடுவதுபோல, உருட்டி விடுதல். அதற்குப் பயன்படும் சுட்டுவிரலைப் பயன்படுத்தும் நுணுக்கத்தை விளக்குதல். அடுத்து, தரைக்கும் மேலே அந்தரத்தில் (Air) , தட்டு சுழன்று போவது போல, சுட்டு விரலால் சுழற்றி எறியச் செய்தல். பிறகு, நின்று கொண்டே தட்டெறியச் செய்தல். அதற்குப் பிறகு, வட்டத்திற்குள்ளேயே சுற்றுகிற -gartbl 13 Gyp föstessoer (Priliminary Swings), 5LG) இல்லாமல் சுற்றிடக் கற்றுத் தருதல். இப்படி சுழலக் கற்றுத் தந்த பிறகு, தட்டுடன் சுற்றி, தட்டை வீசி எறியக் கற்றுத் தருதல். தட்டானது, கடிகாரம் சுற்றுவது போன்ற திசையில், (Clock wise) சுழலும் முறையில் சுழன்று போவது போல எறிய வைத்தல். இப்படி எல்லா அடிப்படைத் திறன்களையும் மாணவர் கள் கற்றுக் கொண்ட பிறகு, மொத்தமாக அனைத்துத் திறன்களையும் சேர்த்து, தட்டெறியச் செய்தல். 3 வேலெறிதல் (Javelin throw) தேவையான பதப்படுத்தும் பயிற்சிகளைத் தருதல். வேலினை, எப்படிப் பிடிப்பது என்கிற பிடிமுறையை (Grip) முதலில் கற்றுத் தருதல். தோளுக்கு மேலே, வேலினை எவ்வாறு பிடித்துக் கொண்டிருப்பது என்பதையும் சொல்லித் தருதல்.