பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


127 பிறகு இரண்டு சுற்றுச் சுற்றி எறிதல், பிறகு, மூன்று சுற்றுக்களைச் சுற்றி எறிதல். இப்படியாக, முழுமையாக எறியப் பயிற்சியளித்தல். இதுவரை, ஒடுகளப் போட்டிகளைக் கற்றுத் தருகிற முறைகளையெல்லாம் கண்டறிந்து கொண்டோம். 10 . நீச்சல் போட்டி நிகழ்ச்சிகள் நீச்சல் என்பது நிறைந்த பயன்களை நல்குகின்ற நல்ல தொரு உடற்பயிற்சியாகும். உடல் உறுப்புக்கள் அனைத் தையும் இயக்குகின்ற அளவில் அமைந்திருப்பதுடன், சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும், மகிழ்ச்சிதருகின்ற சம்பவ மாகவும் நீச்சல் இருக்கிறது. மாணவர்களுக்கு எளிதாக நீந்தும் கலையைக் கற்றுத் தரலாம் என்றாலும், அபாயம் நிறைந்துள்ள இதனை, சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால், சிரமமின்றி சந்தோஷமாக்கிக் கொள்ள முடியும் முக்கியமான பாதுகாப்புக் குறிப்புகள். 1. ஆழமில்லாத இடத்தில் தண்ணிர் குறைந்துள்ள இடத்தில், நீச்சல் பயிற்சியைத் தொடங்க வேண்டும். 2. தூய்மையான தண்ணீர் உள்ள குளத்தில், நீச்சல் கற்றுத் தருவது நல்லது. 3. மிதக்கின்ற ரப்பர் வளையங்கள், கயிறுகள், கிடைப்பதாக இருந்தால், பயிற்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். --