பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 4. முதலுதவி சாதனப் பெட்டி கூடவே இருப்பது நல்லது. 5. தோல் வியாதி மற்றும், நோயாளிகள் நீச்சல் குளத்தில் இறங்காமல், பார்த்துக் கொள்ளவும். 6. மாணவர்கள் தண்ணிரில் இறங்க, குளிக்க, குதித்து விளையாட ஆர்வமாகத் தான் இருப்பார்கள். அவர்களின் ஆசைக்காக, அப்படியே விட்டு விடுவது, ஆபத்தான விஷயமாகும். ஆகவே, கொஞ்சங் கொஞ்சமாக, அவர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுத் தர வேண்டும். 1. தண்ணிரில் நின்று கொண்டு, கழுத்தளவு இருந்து தண்ணிரைப் பயமின்றி சந்திக்கும் துணிவை வளர்த்தல். 2. தண்ணிரில் மிதக்கும் கலையைக் கற்றுத் தருதல். (Water Balance) 3. தண்ணிருக்கு மேலே மிதந்து, முன்னேறச் செய்தல். 4. தண்ணிருக்குள்மூச்சடக்கிக் கொள்கிற பயிற்சியை அளித்தல். 5. பிறகு, தண்ணிரில் ஊர்ந்து செல்கிற நீச்சல் பயிற் சியை (Crawl stroke) கற்றுத் தருதல். 6. கால்களை பின்புறமாக வேகமாக உதைத்து முன்னேறும் வலிமையை வளர்த்து விடுதல். (Leg kick)