பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 34 அதில் ஒன்றைக் கழித்தால், எத்தனை ஆட்டம் என்று தெரியும். ஆகவே 12 குழுக்கள் என்றால், 12-1 = 11 என்று தெரிந்து கொள்ளலாம். போட்டி கிரல் தயாரிக்கும் முறை (Drawing Fixtures) போட்டியில் கலந்து கொள்கிற குழுக்களின் எண்ணிக்கை- இரட்டைப்படையில், 2ன் பெருக்கத்தில் இருந்தால், அதற்கான போட்டி நிரல் தயாரிக்கும் முறை வேறு. அதாவது 2, 4, 6, 8, 16, 32, 64, 128, என்ற கணக்காக இருக்கும் போதும் இரட்டைப் பெருக்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்காமல், 5, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 17லிருந்து 31, 33லிருந்து 63 என்பதாக இருந்தால், போட்டி நிரலின் தயாரிப்புத் தன்மை வேறாக இருக்கும். இரட்டைப் பெருக்க எண்ணிக்கையில் உள்ள குழுக் கனின் எண்ணிக்கை 8 என்று கொள்வோம். அதற்கான போட்டி நிரலை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 1. சரியான அளவுள்ள காகிதத்துண்டுகள் 8 எடுத்து, அவற்றில் 1 முதல் 8 எண்களை தனித்தனியே எழுதி, சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 2. பிறகு ஒவ்வொரு காகிதச் சுருளையும் குலுக்கி எடுத்து, அதிலுள்ள எண்ணைப் படித்து, அதன்படி வரிசையாக எழுத வேண்டும். அதாவது, மேல் தட்டில் உள்ள (Top), அடித்தட்டில் உள்ள எண் களுக் கேற்ற குழுக்களின் பெயர்களை எழுத வேண்டும். U. 3. முதல் சுற்று ஆட்டத்திற்கான குழுக்களை அடைப்புக்குறி மூலம் இணைத்து, ஆடக்கூடிய