பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136


2. 11 அணிகளுக்கான போட்டி நிரல்

போட்டியிடுகின்ற குழுக்களின் எண்ணிக்கை 2ன் பெருக்கத்தில் இல்லாமல் இருந்தால் (8, 16, 32); அதற் கேற்ப போட்டி நிரலைத் தயாரிக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

அதற்கு உதவுவதுதான் சிறப்பிடம் தருகின்ற விலக்கு முறை (Bye)

எத்தனை குழுக்கள் என்று அறிந்து கொண்ட பின், அந்த எண்ணிக்கையை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

11 குழுக்கள் வந்திருந்தால் 5ம்,

12 குழுக்கள் வந்திருந்தால் 4ம்,

13 குழுக்கள் வந்திருந்தால் 3ம்,

20 குழுக்கள் வந்திருந்தால் 12ம் என்ற எண்ணிக்கையில் சிறப்பு விலக்கு (Bye) கொடுக்க வேண்டும்.

இது எப்படி வருகிறது? ஏன் கொடுக்க வேண்டும்? என்று கேள்விகள் எழுவது உண்மை தான்.

நாம் இரண்டின் பெருக்கம் என்று முதலில் கூறினோம் அல்லவா! அது 2,4, 8, 16, 32,64 என்று வருகிறது அல்லவா!

6 குழுக்கள் என்றால் 8க்கு உட்பட்டதல்லவா! அப்பொழுது சிறப்பு விலக்கு பெறுவது 2 குழுக்கள். 8-6 = 2