பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 37 11 குழுக்கள் என்றால் 16க்கு உட்பட்டதல்லவா! அப்பொழுது சிறப்பு விலக்கு பெறுவது 5 குழுக்கள். 16–11 – 5 20 குழுக்கள் என்றால் 32க்கு உட்பட்டதல்லவா! சிப்பொழுது சிறப்பு விலக்கு பெறுவது 12. 32-20 = 12 இப்படியாக, நாம் கழித்து, முடிவு செய்துவிட வேண்டும். சிறப்பு விலக்கு பெறுகின்ற குழுக்கள், முதல் சுற்றுக்கு மட்டுமே விளையாடாத வாய்ப்பைப் பெறுகின்றன. ஒரு போட்டி ஆட்டத்தை ஆடாமல் இருப்பதனாலே, அந்தக் குழுக்களுக்குப் பெரிதாகப் பயன் ஏதும் விளைந்து விடப் போவதில்லை. ஒரு சுற்று ஆட்டம் ஆடிய பிறகு, ஒய்வு கிடைத்தாலும் நல்லது. சுற்றுக்கு முன்னே ஒய்வு கிடைப்பதால் என்ன லாபம்? எனவே, முதல் சுற்று ஆட்டத்திற்கு மட்டும் சிறப்பு விலக்குத் தருகின்ற குறிப்பை மட்டும் நீங்கள்புரிந்துகொள்ள வேண்டும். சிறப்பு விலக்கு அளிக்கின்ற முறை 1. 5 குழுக்கள் சிறப்பு விலக்கு பெறுகின்றன என்றால், அந்த 5 குழுக்களின் பெயர்களையும், தனித்தனியே ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி, சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். — 9