பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வரலாற்றுப் பாடம் என்கிற போது வாய்ச் சொல் விளக்கம். கணக்குப் பாடம் என்கிற போது, கரும்பலகை எழுத்து இயக்கம். உடற்பயிற்சி என்கிற போது, நடைமுறை செயல் இயக்கம்.

இப்படியாக, எடுத்துக் கொள்கிற பாடத்திற்கு ஏற்ப, மேற்கொள்கிற முறையை, முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2. மாணவர்கள் தரம் அறிதல்

வகுப்பறைக்குச் செல்வதற்கு முன்னதாகவே, ஆசிரியரின் பொறுப்பு ஆரம்பமாகிவிடுகிறது

மாணவர்களின் கற்கும் திறன், ஏற்கனவே கற்றிருக்கும் அளவு; அந்தக் குறிப்பிட்டப் பாடத்தில் அவர்களின் அனுபவ அறிவு ஆர்வம் பொதுவாக அந்த வகுப்பின் நடத்தை, கல்வியில் மேம்பாடு, நிகழ்த்திய சாதனை; ஏதாவது, பிரச்சினை உண்டா என்பனவற்றை அறிந்து, அதற்கேற்ப தனது கற்பிக்கும் காரியத்தை ஆசிரியர் தொடங்க வேண்டும். தொடர வேண்டும்.

3. படிப்பிக்கும் சூழ்நிலை

மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற சூழ்நிலை, எப்பொழுதும் ஒன்று போலவேஅமைந்து விடுவதில்லை.

இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம், மாணவர்க்கு மாணவர் சூழ்நிலை மாறியே அமைந்துவிடும்.

கற்பிக்க உதவும் உதவிப் பொருட்கள் சமயத்தில் இல்லாமல் போகலாம். வகுப்புக்கு மாணவர்கள், எதிர்பாராத எண்ணிக்கையில் அதிகமாக வரலாம். பள்ளிச்