உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141


ஒரு வாய்ப்புத் தொடர் போட்டி பந்தயங்களில் உள்ள, கிறைகளும் குறைகளும்.

நிறைகள்

1. பந்தயங்களைக் குறித்த நேரத்தில், குறுகிய காலத்திற்குள் விரைவாக நடத்தி முடிக்க முடியும்.

2.எல்லாம் திட்டமிட்டபடி நடப்பதால், அதிக பொருட்செலவு வராது.

3.பந்தயத்தில் ஒரு வாய்ப்பு தான் உள்ளது என்பதால், போட்டியில் அதிக ஆர்வத்தோடும், தீவிர முயற்சியோடும் குழுக்கள் பங்குபெறும், தோற்கும் குழு இடம் இழந்து போகிறதல்லவா!

குறைகள்

1. போட்டி ஒன்றில் எதிர்பாராத விதமாக தோற்றுப் போகிற குழு, மீண்டும் தனது திறமையை வெளிக் காட்ட இயலாமல் போகிறது.

2. மற்ற குழுக்கள் வெற்றி பெற்று, அதனுடன் போட்டியிடுவதற்காக ஒரு குழு, காத்திருக்க வேண்டியிருக்கிற கால தாமதம் நேர்கிறது.

3. சீட்டுக் குலுக்கிப் போட்டு, போட்டி நிரல் தயாரிக்கப்படுவதால், நல்ல திறமையுள்ள அணிகள் ஒரு பாதியில் வந்து, சந்திக்கிறபோது, நல்ல குழு இடமிழந்து போக நேரிடுகிறது.

சில சமயங்களில் திறனற்ற குழுவும் திறமையான குழுவும் இறுதிப் போட்டியில் சந்திக்க நேரிடுவதும் உண்டு;