பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அந்த நிலையை இந்த ஒரு வாய்ப்புத் தொடர் அடிக்கடி உண்டாக்கி விடுகிறது.

இந்தக் குறையை நீக்கத்தான் சிறப்பிடம் தரும் முறை (Seeding Method) பின்பற்றப்படுகிறது.

ஒரு போட்டிக்கு 12 அணிகள் போட்டிக்கு வந்திருக் கின்றன. சிறப்பு விலக்கு 4 அணிகள் உண்டு என்று நாம் அறிவோம்.

அந்த இடத்தில் வருவதற்கு, சீட்டுக் குலுக்கிப்போடுகிற முறையில், முன்பு நாம் தேர்ந்தெடுத்தோம்.

இங்கு, சிறப்பிடம் தரும் முறையில், சீட்டுக் குலுக்கல் மூலம் அளிக்காமல், போட்டியை நடத்துபவர்களே அணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுப்பது?

அதற்கு 2 வழிகள் உள்ளன.

1. கடந்த காலத்தில், சிறப்பாக ஆடிய அணிகளின் சாதனைகளைக் கொண்டும்;

2. அப்படி தெரியாவிட்டால், நேரில் அந்த அணிகள் பற்றி கேட்டுக் கொண்டும், தீர்மானிக்கலாம்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களை மட்டும் (இங்கே 4 என்று வைத்துக் கொள்வோம்) சீட்டுக் குலுக்கலின் மூலமாக அல்லது பரிந்துரை மூலமாக, சிறப்பிடம் கொடுத்திடலாம்.

இதில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், பங்குபெறுகிற குழுக்கள் 4ம், வருகிற தூரம்,