பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

யிடும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில், நல்ல குழுக்கள் 4ம், மேற்பாதியில் 2; கீழ்ப்பாதியில் 2 என்று பிரிக்கப்பட்டு விடுகின்றன.

2. சிறப்பிடம் தருகிற குழுவை, பரிந்துரை மூலம் போடலாம். அவற்றின் திறமைகள் சரியாக. இருக்கும் பட்சத்தில், சீட்டுக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுப்பதன் மூலம், சிக்கலை சரிசெய்து விடலாம்.

இவ்வாறு சிறப்பிடம் தந்து, விலக்களிக்கும் முறையை (Seeding - byes) எப்படி செய்வது என்பதை, இனி நாம் காண்போம்.

மொத்தம் 25 குழுக்கள் பங்கு பெறுகின்றன.

அவற்றில் 8 அணிகளுக்கு நாம் சிறப்பிடம் தரவேண்டும்.

8 அணிகளும் ஒரே பாதியில் வந்து விடக்கூடாது.

மேல் பாதி, கீழ்ப்பாதி என பிரித்துத் தந்தாலும், 4, 4 என்று வருகிற போது, ஒரு பகுதியிலேயும் வந்து விடக் கூடாது.

ஆகவே, அந்த எட்டு அணிகளும், கால் இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வது போலச் செய்தாக வேண்டும்.

முழு போட்டி நிரலையும் நாம் இதுவரை இரண்டாகப் பிரித்து, மேல்பாதி, கீழ்ப்பாதி என்று பெயர் தந்திருக்கிறோம்.