பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


! 45 இப்பொழுது மேல்பாதியை இரண்டாகவும், கீழ்ப். பாதியை இரண்டாகவும் பிரித்தாக வேண்டும். அந்த அரைப்பாதி இரண்டாகப் பிரிகிற போது, கால் பகுதி. (Quarter) என்ற பெயரைப் பெறுகிறது. எனவே, இங்கு நான்கு கால்பகுதிகள் ஏற்பட்டிருக். கின்றன. அவற்றை நாம் 1, 2, 3, 4 என்று பெயரிடுவோம். ஒவ்வொரு கால்பகுதியிலும் 2 அணியாக 4 கால்பகுதி: யிலும் 8 அணிகள் இடம் பெறுகின்றன. இவ்வாறு இடம் பெறுகிற சிறப்பிடம் பெற்ற அணிகள், கால் இறுதிப் போட்டியில் தான், வந்து போட்டியிடும். அப்படியென்றால், அரையிறுதிப் போட்டியில் 4 அணி கள், இறுதிப் போட்டியில் 2 அணிகள் என்று இடம் பெறும். இதற்கிடையில் சிறப்பிடங்கள் பெறுகிற குழுக்கள், முதல் சுற்றிலேயே தோற்றுப் போனாலும் போகலாம். அது: வேறு விஷயம். = நாம் சிறப்பிடம் தருவது என்பது தான், இங்கே முக்கிய மானதாகும். - அந்த சிறப்பிடம் தருகிற முறையை, கீழ்க்காணும். முறைப்படி தரலாம்.