பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

அதில் சிறப்பிடம் 1, சிறப்பிடம் என்று குறித்திருக்கிறோம்.

அதாவது, சீட்டுக் குலுக்கலில் முதலாவதாக வருகின்ற அணி கீழ்பாதியில் உள்ள 4வது கால்பகுதியில் கடைசியிலும்: 2வதாக வருகிற அணி, மேல்பாதியில் உள்ள 2வது கால் பகுதியிலும், இப்படியாக இடம்பெற வேண்டும்.

குலுக்கலில் முதல் சீட்டு-கீழ்பாதியில்-4வது பகுதி.
2வதாக வருகிற சீட்டு-மேல்பாதி-2வது பகுதியில்.
3வதாக வருகிற சீட்டு-கீழ்பாதி-3வது பகுதி.
4வதாக வருகிற சீட்டு-மேல்பாதி-1வது பகுதி.
மீதியை படம் பார்த்துப் புரிந்து கொள்க.

25 குழுக்கள் என்றால், 7 சிறப்பிடம் தானே உண்டு. நமக்கு. 8 அணிகளுக்கு இடம் தர வேண்டுமே!

அதற்காக, 8வதாக சீட்டில் வரும் அணிக்கு, மேல் பாதியில் உள்ள 1வது இடத்தை அளித்திட வேண்டும்.

2. பிறகு, மீதியுள்ள 17 இடங்களுக்காக, சீட்டுக் குலுக்கல் போட்டு, அவற்றை வரிசையாகக் குறித்துக் கொண்டே வரவேண்டும். அதாவது மேலிருந்து, கீழாகக் குறித்துக் கொண்டுவர வேண்டும்.